சென்னை புலியந்தோப்பில், ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்ற இரு சிறுவர்கள் மீது பெற்றோரின் அனுமதியுடன் பழம் குற்றுதல் நடத்தப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. புலியந்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ முன்டகன்னியம்பாள் ஆலய வைபவத்தின்தின் போது, குறித்த இரு பிள்ளைகளையும் பெற்றோர் நேர்த்திக்காக கொடுமைப்படுத்தியுள்ளனர்.
பிள்ளைகளின் உடலில் பழம் குத்தி (ஊசியில் பழம் குற்றி அதனை உடலில் குற்றுதல்) குறித்த நேர்த்திக் கடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனினும் இரு சிறுவர்களும் வலியின் உச்சத்தின் கண்கலங்கி நிற்கும் புகைப்படங்கள் பார்ப்போர் கண்களை கலங்க வைத்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறான மூட நம்பிக்கைகளும் சிறுவர்கள் மீதான வன்கொடுமை என்றும், இவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.
இவ்வாறான கொடூர செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமெனில், சட்டத்தில் பலம் கொண்டுவரப்பட வேண்டும் என, குறித்த செயலுக்கு எதிராக பலரும் டுவிட் மற்றும் முகநூல்களில் கருத்து வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.