யாழ்ப்பாணம், தென்மராட்சி பகுதியின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் காவல்துறையால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் காவல் நிலையத்தில் பதட்டத்துடன் திரண்ட காட்சி பலரது கவனத்தை ஈர்த்தது.
வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில்பேரின் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் ஏழுபேரையும் மானிப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரித்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது, மானிப்பாய்காவல் நிலையத்தின் முன்பாக, கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என சுமார் 40பேர் வரையில் திரண்டனர். தஎனது மகனுக்கும் வாள்வெட்டுச் சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என கைதான இளைஞர் ஒருவரின் தந்தை காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
வாள்வெட்டுக் குழுவுடன் தொடர்புடையதாக அவர் கைத்தொலை பேசியில் பதிந்துள்ள தகவல்களை காவல்துறையினர் குறித்த தந்தையிடம் காண்பித்தனர். தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது என்று தந்தை காவல்துறைக்கு கூறினார். அங்கு திரண்டிருந்த உறவினர்கள் பலர், கைதானவர்களுக்கு குற்றச் செயல்களுடன் தொடர்பு இல்லை என்று கூறினார். அவர்களை விடுவிக்குமாறும் கோரினர்.