Loading...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின், பொதுஜன முன்னணி உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷவே, கோட்டபாயவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
மிலிந்த ராஜபக்ஷவை எனது அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நிமித்துள்ளேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடலில் தகைமை பெற்றவர் என கோட்டபாய தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர். தற்போது அவர், பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கிறார் என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Loading...