Loading...
தமிழ் நாடு ஸ்பெஷல் உணவான கொத்து பரோட்டா செய்வதற்காக முறையை அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
Loading...
பரோட்டா – 4
பெரிய வெங்காயம் – 2
பெரிய தக்காளி – 1
பச்சை மிளகாய் – 4
கரம் மசாலா / சிக்கன் மசாலா – 2 தேக்கரண்டி
முட்டை – 2-3
கடுகு விதைகள் – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5
மல்லி இலை – கையளவு
புதினா இலைகள் – 5-6 இலைகள்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய் முறை..!
- பரோட்டாவை சிறிய துண்டுகளாக பிரித்தெடுத்து, ஒதுக்கி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், கடுகு, கறிவேப்பிலை போட்டுக்கொள்ளவும்.
- அதன் மேல் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு பழுப்பு நிறமாறும் வரை வறுத்து கொள்ளவும்.
- தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அடுத்து கரம் மசாலா, சில நறுக்கப்பட்ட கொத்தமல்லி, கறி கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்க்கவும்.
- துண்டாக்கப்பட்ட பரோட்டாவைச் சேர்த்து கொள்ளவும். ஒன்றாக அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வேக வைத்த பரோட்டா மீது முட்டையை உடைத்து உற்றவும். பின்னர் அனைத்தையும் வேக வைக்கவும்.
- கொத்தமல்லி மற்றும் காய்ந்த மிளகாயை இதன் மீது தூவிக்கொள்ளவும், சுவையான கொத்து பரோட்டா தயார்…
Loading...