உலகில் தேநீர் அருந்துவதனை விரும்பாதவர்கள் கிடையாது. தேநீர் என்பது பலருக்கும் விருப்பமான ஒன்றாகும்.
தற்போது தேநீர் தயாரிப்பில் பாலை எப்போது கலப்பது என்பது தொடர்பில் விவாதம் ஒன்று எழுந்துள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான ஆய்வு ஒன்றை பிரித்தானியாவினால் நடத்தப்பட்டுள்ளது.
அந்த ஆய்விற்கமைய 79 வீதமானோர் நீரில் பால் இறுதியாக கலக்கப்படுவதற்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
எனினும் பல்வேறு வயதினரிடையே ஆய்வின் முடிவுகள் மாறுபட்டு காணப்பட்டுள்ளது.
18வயதுக்கும் 24வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 96 வீதமானோர் பாலை முதலில் எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை, தேநீர் போன்றவற்றைக் கலக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
65 வயதுக்கு மேற்பட்டோரில் 32 விழுக்காட்டினரும் அதே எண்ணம் கொண்டிருந்தனர்.
அதற்கமைய பாலை முதலில் எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை, தேநீர் போன்றவற்றைக் கலக்க வேண்டும் என்பதே சரியான விடயமாக கருதப்பட்டுள்ளது.