திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி அவரது வீட்டில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருப்பது பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வர வைப்பதாக உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி சில ஆண்டுகளாக சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். முதுமை மற்றும் உடல் நலிவு காரணமாக அவர் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் அதி நவீன சக்கர நாற்காலிதான் அவரது மொபைல் வாகனமாக மாறியிருந்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்திரிகையாளர் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது என அனைத்துக்குமே இந்த சக்கர நாற்காலிதான் அவரது உற்ற துணைவனாக இருந்து வந்தது.
ஆனால் தற்போது கருணாநிதி மறைந்து விட்டார். அவரது சக்கர நாற்காலியும் ஓரம் கட்டப்பட்டு விட்டது. கருணாநிதியை நாம் மட்டும் மிஸ் செய்யவில்லை.. இதோ இந்த சக்கர நாற்காலியும்தான்.