முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளது.
சந்தையில் முட்டையின் விலை 20 ரூபா முதல் 22 வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கோழி இறைச்சி கிலோவொன்றின் விலை 500 ரூபா முதல் 600 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணங்கள் உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோழி இறைச்சி விலையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்படவில்லையென அகில இலங்கை கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்று (07) கூடிய வாழ்க்கைச் செலவு குழு முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பில் உற்பத்தியாளர்களை சந்தித்து விடயங்களை ஆராய இதன்போது தீர்மானிக்கப்ப்டடுள்ளது.
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்த வாழக்கை செலவு குழு தீர்மானித்துள்ளது