அங்குலானைப் பகுதியில் ஒரே புகையிரத கடவையில் இரண்டு புகையிரதங்கள் பயணித்தமையின் காரணமாக இன்று காலை புகையிரத போக்குவரத்து ஸ்தம்பித மடைந்ததுள்ளதாக புகையிரதக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அளுத்கமையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று காலை 8.00 மணியளவில் அங்குலான பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே கடவையில் களுத்துறையில் இருந்து காலை 7.00 மணிக்கு நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் பயணித்தை மேற்கொண்டிருந்தது. இரண்டு புகையிரதங்களும் ஒரே கடவையில் சந்தித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையினால் நிகழவிருந்த மற்றுமோர் பாரிய புகையிரத விபத்தொன்று மயிரிழையில் தவிர்க்கப்பட்டது.