தற்போது பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களுக்கு இன்னொரு போட்டியாளரின் கேரக்டர் போல இருக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் மஹத் மும்தாஜ் போல நடந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்கில் மும்தாஜை அசிங்கப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார் மஹத். இன்று மும்தாஜை போலவே உடை அணிந்திருந்த மஹத், அவரை அசிங்கப்படுத்தும் விதத்தில் அனைவர் முன்பும் உடையை கழற்றுவது போல நடித்தார். இதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.
இவ்வாறிருக்க, பாலாஜியை சங்கடப் படுத்த வேண்டும் என்ற டாஸ்க்குக்காக பாலாஜி போன்று வேஷம் போட்ட வைஷ்ணவி பாலாஜி முன் நின்று தனது மேலாடையைக் கழட்டினார். இதனால் தர்மசங்கடத்திற்கு ஆளான பாலாஜி கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். என்னதான் டாஸ்க் ஆகா இருந்தாலும் எல்லை மீறி செல்வதென்பது ஒரு போதும் அனுமத்திக்கவே முடியாதது.