கனவுகள் என்பவை தூங்கும் நேரத்தில், ஆழ்ந்த நிலையில் இருக்கும் போது மனம் அல்லது மூளையில் ஏற்படும் நினைவலைகள் ஆகும்.இரவில் உறங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் இயல்பானதாகவே இருக்கும். நமது எண்ண ஓட்டங்களைப் பொறுத்து அந்த கனவுகள் அமையும். ஆனால், பகலில் தோன்றும் கனவுகள், நமது மனம் விரும்பும் விடயங்களின் பிரபலிப்பாகவே இருக்கும்.
கனவில் நடந்த நிகழ்வுகள் விழித்தவுடன் சிலருக்கு நினைவில் இருக்கும். சிலருக்கு நினைவில் இருக்காது. ஆனால், கனவின் தொடக்கத்தை யாராலும் சரியாக கூற முடியாது.இதுபோன்ற கனவுகள் ஏன் தோன்றுகின்றன. இவற்றால் நல்லது அல்லது தீமை நடக்குமா? இந்த கனவுகள் பலிக்குமா என்பது குறித்து இங்கு காண்போம்.
கனவுகளின் வகைகள்:கனவு இரண்டு வகைப்படும். அதில் ஒன்று உடல் மற்றும் மன எண்ணங்களின் அடிப்படையில் தோன்றக்கூடியவை. மற்றொன்று பூர்வ ஜென்ம அல்லது ஆத்மாவின் ஆசைகள் மற்றும் எண்ணங்களை உங்களுடன் இணைக்கக் கூடியவை.
முதல் வகை கனவுகள்:முதல் வகை கனவுகள், உங்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த நடவடிக்கைகளையும், ஆசைகளையும் எடுத்துரைக்கும்.
இரண்டாம் வகை கனவுகள்”:இந்த வகை கனவுகள் பூர்வ ஜென்ம ஆசை, பழி, ஆன்மாவின் லட்சியம் போன்ற எண்ணங்கள் உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து அதனை நிறைவேற்ற துடிக்கும். ஒருவேளை அவை இந்த ஜென்மத்தில் நிறைவேறவில்லை என்றால், அடுத்த ஜென்மத்திற்கு அந்த ஆசைகள் கனவுகளாக கடத்தப்படும்.
அனைத்துவகை கனவுகளையும் ஒரே பதிப்பில் பிரதிபலிக்க இயலாது என்பதால், எழுத்துகளின் அடிப்படையில் கனவில் ஏற்படும் ஒவ்வொரு பொருளுக்குமான அர்த்தத்தை இங்கு காணலாம்.
அதன்படி ஆங்கில எழுத்தான S-யில் தொடங்கக் கூடிய வார்த்தைகள், அதாவது பொருட்களின் பெயர்கள் உங்களது கனவில் தோன்றியிருந்தால், அதற்கான அர்த்தங்கள் என்னவென்று பார்ப்போம்.
பயணம் (Sails):ஒரு இடத்திற்கு புறப்படுவது அல்லது பயணம் செய்வது போன்ற கனவு தோன்றினால், நீங்கள் பயணம் செய்து முடிக்க வேண்டிய விடயம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றலும் உங்களிடம் உள்ளது என்று அர்த்தம்.
எனவே, உங்களின் வாழ்வில் பயணம் செய்து முடிக்க வேண்டியது ஏதாவது உண்டா என்று நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
மண் (Sand):உங்கள் கனவில் மண்ணின் பிம்பம் அடிக்கடி தோன்றினால், நீங்கள் நிலைத்தன்மை இன்றி வாழ்ந்து வருகிறீர்கள் என்று பொருள். மேலும், எந்தவித பாதுகாப்பு உணர்வும் உங்களது மனதில் இல்லை என்று பொருள்.
உங்களது சிந்தனை அந்த வகையிலான எண்ணங்களைக் கொண்டிருந்தால், உங்களது கனவில் மண்ணின் பிம்பம் தோன்றும்.
பள்ளி (School):பள்ளி என்பது பலருக்கும் அடிக்கடி கனவில் தோன்றும் ஒரு விடயமாகும். இதுபோல் பள்ளியின் படங்களோ அல்லது பள்ளி சார்ந்த கனவுகள் உங்களின் மனதில் தோன்றினாலோ, உங்கள் வாழ்வில் கற்றல் இன்னும் முடியவில்லை என்று அர்த்தம்.
நீங்கள் கற்று முடிக்க வேண்டிய பல விடயங்கள் மீதம் உள்ளன என்பதை உணர்த்தவே, பள்ளி சார்ந்த விடயங்கள் உங்களது கனவில் தோன்றுகின்றன.
கத்தரிக்கோல் (Scissors):கத்தரிக்கோல் உங்கள் கனவில் தோன்றினால், அது குடும்பத்தில் அல்லது உங்களது உறவில் பிளவு ஏற்படுவதை குறிக்கும். அத்துடன் உங்களது தொழில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாததையும், லாபம் கிடைக்காததையும் குறிக்கும்.
எனவே, கத்திரிக்கோல் உங்களது கனவில் தோன்றினால், நீங்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து, கஷ்டங்களை தடுப்பது எப்பது, அவற்றை சமாளிப்பது எப்படி என்பது குறித்து நன்கு திட்டமிட வேண்டும்.
தேள் (Scorpion) மற்றும் நாகங்கள் (Serpents):தேளின் உருவங்கள் உங்களது கனவில் தோன்றினால், அது உங்களுடன் இருக்கும் போலியான நண்பர்களை குறிக்கும். அதுவும் உங்களது வாழ்வில் அழிவை ஏற்படுத்த துடிக்கும் துரோகி உங்களுடன் இருக்கிறான் என்பதை அது குறிக்கும். எனவே, கனவில் தேள் தோன்றினால் உடன் பழகும் நண்பர்களிடம் சற்று கவனமாக இருங்கள்.
நாகங்கள் கனவில் தோன்றுவது உங்களது எதிர்காலத்தில் நடக்கப் போகும் அழிவை அல்லது ஏமாற்றங்களை முன்கூட்டியே உணர்த்துவதற்காக என்பதை உணருங்கள்.
தற்கொலை (Suicide):தற்கொலை செய்வது போன்ற அல்லது தற்கொலை செய்தவர்களை நீங்கள் கனவில் கண்டால், ஏதோ ஒன்று உங்கள் வாழ்க்கையை வலுக்கட்டாயமாகவோ அல்லது உங்களது விருப்பத்திற்கு மாறாகவோ முடிக்க வருகிறது என்று பொருள்.
அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக உங்களது பிடிக்காத பெண் மனைவியாக வருவது, பிடிக்காத வேலையில் அமர்வது என்பன போன்று இருக்கலாம்.
வாள் (Sword):உங்கள் கனவில் வாள் தோன்றினால், உங்களுக்கு புகழ், சமூகத்தில் உயர்வு ஆகியவை கிடைக்கப் போகிறது என்று பொருள். எனவே, வாள் தோன்றினால் மகிழ்ச்சியாக இருங்கள். கடின உழைப்பை வெளிப்படுத்தி, அதற்கான பரிசை அடையுங்கள்.
நீச்சல் (Swimming):நீச்சல் அடிப்பது போல் உங்கள் கனவில் தோன்றினால், உங்களது வாழ்வில் நடக்கும் போராட்டங்களை குறிக்கும். அல்லது போராட்டம் ஏற்படப் போவதை குறிக்கும். எனவே, நீச்சல் அடிப்பது போல் தோன்றினால், போராட்டத்தை எதிர்கொள்ள உங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், இந்த சோதனைகளைக் கடந்து உங்களுக்கு வெற்றி வந்து சேரும் என்பதை உணர்ந்து, தொடர்ந்து செயல்படுங்கள்.