காதல் கிரகம் சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து இன்று முதல் கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார்.ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும்.சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன்.
கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார்.இந்த மாத சுக்கிர பெயர்ச்சி யாருக்கு என்ன பலன்களை கொடுப்பார் என பார்க்கலாம்.
மேஷம்:சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம்:காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது வருமானத்திற்காக மாதம் இது. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது உற்சாகம் கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாடு பயணம் சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்:சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் ஏழை பிராமணர்களுக்கு சர்க்கரை தானமாக தரலாம்.
கடகம்:ராசி நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. சிறுபயணம் செல்ல வேண்டியிருக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும். சிறு குழந்தைகளுக்கு ஆடைகள் தானமாக வாங்கித்தரலாம்.
சிம்மம்:இதுநாள் வரை உங்கள் ராசியில் சங்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். அம்மன் கோவில்களும் வெண்மை நிற மலர்களை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடக்கும்.
கன்னி:காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். இது சுக்கிரனின் நீச்ச ஸ்தானம் என்றாலும் பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.
துலாம்:காதல் ராசிக்காரர்களே…உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.
விருச்சிகம்:சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருவாய் அதிகாிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.
தனுசு:உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் அமரப் போவதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்ற நன்மைகள் நடைபெறும்.
மகரம்:ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் அமர்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.
கும்பம் : உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூற நன்மைகள் நடைபெறும்.
மீனம் : காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திரத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டு விடும். துர்க்கா தேவியை செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் பெண் குழந்தைகளுக்கு வெள்ளியால் ஆன பொருட்களை தானமாக கொடுக்கலாம்.