ஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தப்பட்டு 10 நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தின் சம்பால்பூர் மாவட்டத்தின் குச்சிண்டா எனும் பகுதியில் வசித்து வருபவர் சோம்யா ரஞ்சன் தருவா. இவர் கடந்த மாதம் 21-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம் பெண்ணை கடத்தி தனது இல்லத்தில் அடைத்து வைத்துள்ளார். மேலும், துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
10 நாட்களாக அந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் அவனிடம் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சோம்யா ரஞ்சன், அந்த பெண்ணின் உறவினரை கடத்திவைத்துக் கொண்டு, போலீசிடம் போனால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்த உறவினரை அவன் விடுவித்தவுடன், குச்சிண்டா காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சோம்யா ரஞ்சன் தருவா என்ற காம கொடூரனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மட்டுமன்றி, தண்டனை உடனடியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது.