Loading...
மட்டக்களப்பின் இளம் வளர்ந்துவரும் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு,கல்லடியை சேர்ந்த மாணிக்கவாசகம் விஜயரூபன்(34வயது)என்னும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
கொழும்பில் உள்ள அரச திணைக்களத்தில் கடமையாற்றும் இவர் தனியார் இணை தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் கடமையாற்றுவதுடன் பல்வேறு துறைசார் கலைஞராகவும் அண்மைக்காலமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது பணிக்காக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்ததபோது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...