Loading...
தென்னிலங்கையிலுள்ள தேசிய பூங்கா ஒன்றினுள் பாரிய மலைப்பாம்பு மான் ஒன்றை வேட்டையாடும் அரிய காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சி நாட்டிறுகுச் சுற்றுலா வந்த வெளி நாட்டுப் பயணி ஒருவரின் கமெராவில் பதிவாகியுள்ளது.
இலங்கையின் தேசிய பூங்காக்களுள் ஒன்றான புந்தல பூங்காவுக்கு சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் இந்த அரிய காட்சியைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Loading...
நன்றாக கொழுத்த மான் ஒன்றை இந்த மலைப்பாம்பு மடக்கிப் பிடித்து தனது உடலால் நெரித்துக் கொன்றுவிட்டு அதனை முழுமையாக விழுங்கியுள்ளது.
இந்த செயற்பாட்டிற்காக அந்த மலைப்பாம்பு சுமார் அரை மணித்தியாலங்களை செலவிட்டுள்ளதாக குறித்த சுற்றுலா பயணி தெரிவித்தார்.
புந்தல பூங்கா இலன்ப்க்கையின் தெற்கே ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகளின் புகலிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...