நியுசிலாந்தில் கல்வி பயில்கின்ற 900க்கும் அதிகமான இலங்கையைச் சேர்ந்த மாணவர்களது வீசாக்கள் அந்த நாட்டின் அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
நியுசிலாந்தின் குடிவரவுத் துறை அமைச்சர் லேன் லீஸ் – கலோவேய் இதனைத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள நியுசிலாந்து வீசா வழங்கு நிறுவனத்தின் ஊடாக, இலங்கையைச் சேர்ந்த மாணவர்களுக்கு நியுசிலாந்து வீசாவைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனம் ஒன்று மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு போலியான ஆவணங்களைத் தயாரித்து, வீசா வழங்கி இருக்கிறது.
இந்த குற்றச் செயல் கடந்த மார்ச் மாதம் அளவில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அக்காலப்பகுதியில் இலங்கை மாணவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற 88 விண்ணப்பங்களில் 83 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன.