கருணாநிதி இறந்து முழுதாக இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் மெரீனா அருகே கலைஞர் கருணாநிதியின் ஆவியை பார்த்த தொண்டர் என்ற பெயரில் ஒரு எடிட் செய்யப்பட்ட படத்தை பரப்பிவருகிறார்கள்.
இதை அப்படியா என்று ஏமார்ந்து பார்ப்பவர்கள் சிலர், இது போலி தான் என்று அறிந்தும்.., அவனை திட்டித்தீர்த்துவிட வேண்டும் என்று முடிவுக்கட்டி அந்த படத்தை பார்ப்பவர்கள் பலர்.
பிரபலங்களை வைத்து மட்டும் தான் இவர்கள் இப்படி யூடியூபில் விளையாடுகிறார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட வேண்டாம். கிரிக்கெட், கால்பந்தாட்டம் என விளையாட்டையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை.
காணொளி முகப்பு படத்தில் இதோ எப்படி பந்து டர்ன் ஆனது, எவ்வளவு உயரம் ஜம்ப் செய்து பிடித்தார், பந்து அப்படி லாவகமாக வளைந்து சென்றது என அம்புக்குறி எல்லாம் போட்டி காண்பிப்பார்கள்.
மக்களும் அப்படி என்ன அதிசயம் என்று உள்ளே சென்று பார்த்தால் ஒன்றும் இருக்காது.
தற்போதைய காலத்தில், முக்கியமாக இந்த டிஜிட்டல் யுகம் பிறந்த பிறகு, தொழில்நுட்பம், வர்த்தகம், வணிகம், லாபம், நஷ்டம் மட்டுமல்ல… ஏமாற்றப்படுவதும் அதிகமாகிவிட்டது என்பது உண்மை.
இதோ எடிட் செய்யப்பட்டு தீயாய் பரப்பப்படும் அந்த புகைப்படம். யாரும் நம்பி விடாதீர்கள்.