மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே புதைக்கப்பட்டார்.
அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா.
இவர்தான் சில வருடங்களாக கருணாநிதிக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருந்த கவனித்துக்கொண்ட உதவியாளர், கருணாநிதியின் நிழல்.
கருணாநிதியுடன் கோபாலபுரம் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தது நித்யா தான்.
கருணாநிதியிடம் செல்போன் இல்லையாம் யாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னுடைய உதவியாளர் நித்யாவின் போனில் இருந்து தான் பேசுவாராம் கருணாநிதி.
குடும்ப உறுப்பினர்கள், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைவிட இவர்கள் இருவரும் தான் கருணாநிதியின் நிழலாக இருந்தவர்கள்.
கருணாநிதியை வீட்டில் இருந்து வீல் சேரில் ஏற்றி விழா நடக்கும் இடத்தில் அமர வைப்பது முதல், பர்சனல் உதவிகள் செய்வது வரை எல்லாமே நித்யா தான்.
நித்யாவின் இயற்பெயர் நித்யானந்தன். பல்லாவரத்தைச் சேர்ந்தவர். பி.காம் பட்டதாரி. கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவருக்கு கறுப்புப் பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கருணாநிதி செல்லும் காருக்கு முன்பாகச் செல்லும் கருப்புப் பூனைப்படை கார்களுக்கு தனியார் கார் ஓட்டுனராக வந்தவர் தான் இந்த நித்யா.
முதலில் சிறுசிறு வேலைகள் செய்து வந்த நித்யா, பின்னர் கருணாநிதியின் உதவியாளராகப் பணி அமர்த்தப்பட்டார்.
அருந்ததியருக்கு மூன்று சதவிகித உள்ஒதுக்கீட்டை வழங்கிய பிறகு, துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியின் இல்லத் திருமணத்தில் பேசிய கருணாநிதி, என்னிடம் வேலை பார்க்கிற உதவியாளர் நித்யா, அருந்ததியர் சமுதாயத்தவர்.
இந்தப் பையன் எனக்கு சினேகிதன் என்று சொல்வது எனக்குப் பெருமை என்றார். இன்னொரு சந்தர்ப்பத்தில், 24 மணி நேரமும் அணுக்கத் தொண்டனாக இருந்து என்னைக் கவனித்துக் கொள்வதும் இந்த இளைஞன்தான் என்றும் கூறியிருக்கிறார்.
முதல்வராக இருக்கும் போது புறநகரில் இருந்த வேல்ஸ் பல்கலைக்கழக விழாவுக்கு கருணாநிதி சென்றபோது, பல்லாவரத்தில் நித்யாவின் வீட்டுக்கும் சென்றார்.
அப்போது, நித்யா தன் வீட்டருகில் அண்ணா சிலையை அமைத்திருக்க… அதைத் திறந்துவைத்த அந்த விழாவில் நித்யா செங்கோல் ஒன்றை பரிசளிக்க அதை இன் முகத்தோடு வாங்கிக் கொண்டார் கருணாநிதி.
இது கட்சியில் சில முக்கியஸ்தர்களுக்கு கிடைக்காத பெருமை. இதில் நித்யாவின் இமேஜும் கட்சிக்குள் அதிக அளவில் உயர்ந்தது.
கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அரசியல் மற்றும் அரசு பதவிகள் வரை நித்யாவுக்கு வேண்டப்பட்டவருக்கு கிடைத்திருக்கிறது குறிப்பிடத் தக்கது.
கருணாநிதியிடம் பேசுவதற்கு முன்னர் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று இவரிடம் கேட்டுக்கொண்டுதான் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருணாநிதியை வந்து சந்திப்பார்களாம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட பல்லாவரம் பகுதியில் கருணாநிதி என்கிற வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
அந்தப் பெயரை பரிந்துரைத்தது நித்யா அவரை மாற்றக்கோரி ஸ்டாலினும், தா.மோ.அன்பரசனும் சென்று கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள்.
அப்போது டென்ஷனான கருணாதிதி அதட்டி துரத்தி விட்டாராம்
அதனால் தான் கருணாநிதிக்கு அவர் குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தபோது நித்யாவும் அவர்களில் ஒருவராக மரியாதை செய்தார்.
கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவருக்கு எல்லாமுமாய் இருந்தவர் நித்யா. காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவில் கண் மூடும்வரை கருணாநிதியுடனேயே இருப்பதில்தான் நித்யாவின் நாட்கள் கழியும். இனி வரும் நித்யாவின் நாட்கள் எப்படிக் கழியும்….