நினைத்தவுடன் உடனடியாக செய்ய கூடிய சுவையான ராவா தோசையை செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம்..
தேவையான பொருட்கள்
1 கோப்பை ரவா
3/4 கோப்பை அரிசி மாவு
1/4 கோப்பை கோதுமை மாவு
1 தேக்கரண்டி தேங்காய்
1 தேக்கரண்டி ஜீரா
2-3 பச்சை மிளகாய்,
1/4 கோப்பை தனியா
1/2 வெங்காயம்
2 3/4 கோப்பை தண்ணீர்
1 டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் நெய் / பட்டர்
செய் முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் ரவா, அரிசி மாவு, கோதுமை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்த நன்றாக கலந்து கொள்ளவும். அரை மணி நேரம் அதனை ஒதுக்கி வைத்து கொள்ளுங்கள்.
அரை மணி நேரம் கழித்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சீரகம், தேங்காய் துருவல் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து கொள்ளவும்.
நான்ஸ்டிக் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் சற்று எண்ணெய் அல்லது பட்டர் பூசி கொள்ளவும்.
நன்றாக மிக்ஸ் ஆகிய மாவினை தோசையான ஊற்ற வேண்டும். தோசை வேகும் போது ஓரத்தில் சற்று எண்ணெய் ஊற்ற வேண்டும்.
தோசை நீறம் மாறியவுடன் அடுத்த பக்கம் திருப்பி போட வேண்டும். ஒரு நிமிடம் தோசையை வேக வைத்து பரிமாறலாம்.