நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக நடந்துகொள்வது முகம்சுளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் மஹத்தின் காதலி பிராச்சி ஆரம்பத்தில் இருந்தே மஹத்திற்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். “அவரின் வயதில் வீட்டில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.. அது பெண்களாக இருந்தாலும், பழகுவதில் என்ன தவறு?” என அவர் கேள்வி கேட்டுள்ளார்.
இந்நிலையில் தான் மற்றொரு விஷயத்தில் மஹத் மீது அப்செட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னர் தான் 10 செட் ஜீன்ஸ், சர்ட், ஷூ ஆகியவற்றை வாங்கி கொண்டுசென்றாராம் மஹத். ஆனால் வெறும் ஒரு மாதத்தில் பிக்பாஸ் டீமிடம் இருந்து கால் வந்தது.. புது துணிகள் வேண்டும் வாங்கி வாருங்கள் என்று.
அதை கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன். அவரை துவைத்து மீண்டும் போட சொல்லுங்கள் என அவர்களிடம் கூறினேன். ஒரே நாளில் இத்தனை முறை ஏன் துணி மாற்றுகிறார் என கோபமானேன்.
மேலும் அவர் வெளியில் வந்ததும் அவரை இதற்காக பழிவாங்கப்போறேன் என பிராச்சி மிஸ்ரா கூறியுள்ளார்.