Loading...
வவுனியாவில் முஸ்லிம் மக்கள் நேற்று குளத்தினுள் இறங்கி தொழுகையில் ஈடுபட்டனர். (vavuniya muslims prayers inside lake,Tamilnews)
வவுனியாவில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலைமை காரணமாக குளங்களில் நீர்வற்றி காணப்படுவதுடன் கிணறுகளில் கூட நீர்வற்றி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Loading...
கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள் கூட உணவில்லாமல் நோய்வாய்ப்பட்டு இறந்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று(10) வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அரபுக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து மழைவேண்டி குளத்தினுள் தொழுகை நடாத்தி இறைவனை பிரார்த்தனை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
Loading...