நாகினி சீரியலுக்கு ரசிகர்களிடம் ஏக போக வரவேற்ப்பு இருந்து வருகின்றது.
ஹிந்தியில் இருந்து டப் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பு செய்யபட்ட இந்த சீரியலுக்கு எதிராக தமிழ் சீரியல் நடிகைகள், நடிகர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹிந்தி சீரியல்கள் வருகையால் தமிழ் சீரியல் நடிகர், நடிகைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த சீரியல் முக்கியமான வேடத்தில் கவர்ச்சியாக நடித்திருந்த நடிகை அனிதா ரெட்டிக்கு ரசிகர்களிடம் பயங்கர ஆதரவு எழுந்துள்ளது.
இந்த சீரியலில் நடிக தொடங்கும் சில ஆயிர ஃபாலோவர்ஸ்களை பெற்றிருந்த அனிதா. இந்த சீரியலுக்கு பின் 30 லட்சம் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து வாய் திறந்துள்ளார் அனிதா. சினிமாவில் படுக்கையை பகிராமல் ஒரு நடிகையால் ஒன்றுமே செய்ய முடியாது.
இவர், அவர் என்று குறிப்பிட்டு கூற முடியாது. ஏனென்றால் ஒட்டு மொத்த துறையும் அப்படிதான் உள்ளது.
படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு என்பதை நடிகைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஆனால், அப்படி வெளியே கொண்டு வந்தால் அவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் தான் யாரும் வாய் திறக்க மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அனிதா