வியாபாரிகளின் கடன் அட்டைகளின் கட்டணத்தை குறைக்க, முன்னணி கடன் அட்டை நிறுவனங்கள் உடன்பட்டுள்ளதாக, மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனை, நிதி அமைச்சர் பில் மொர்னியு, சிறு வணிகம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு புதிய அமைச்சரான மெரி என்ஜி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள் வருட மொன்றிற்கு கிட்டத்தட்ட 250 மில்லியன் டொலர்கள் வரை சேமிக்க உதவக்கூடிய வகையில், கடன் அட்டை நிறுவனங்கள் தன்னார்வமாக உதவ ஒட்டாவாவுடனான ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 2020ஆம் ஆண்டிலிருந்து விசா மற்றும் மாஸ்ரகாட் வர்த்தகர்களிடமிருந்து அறவிடும் சராசரி வருடாந்த கட்டணத்தை, 1.5 சதவிகிதத்திலிருந்து 1.4 சதவிகிதமாக குறைக்கின்றது
இதன் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்கலாம் எனவும் மேலதிக நிதி சொந்த காரர்கள் முதலீடு செய்ய, விரிவாக்க மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க ஊக்குவிக்க முடியுமெனவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.