இந்தியாவில் பிறந்து இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் இரு நாடுகளுக்கிடையில் நட்பை வலுப்படுத்துவதுடன் நேசத்திற்கும் காரணமாக இருக்கின்றார்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இன்று இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட “மகாத்மா காந்தி புரம்”புதிய கிராமத்தின் தனி வீடுகள் திறக்கும் விழாவில் இந்தியாவிலிருந்து காணோளி மூலம் நேரடியாக மலையக மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அந்த காணொளி அழைப்பில் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த வருடம் அட்டனுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொழுது மக்களாகிய நீங்கள் எனக்கு அளித்த வரவேற்பின் உற்சாகம் என் மனதில் பசுமையான நிகழ்வாக உள்ளது. நண்பர்களே இன்று உங்களின் பல நுற்றுக்கணக்காணோர் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பெற்றுக்கொள்கின்றீர்கள். இன்றைய தினம் நாம் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கியுள்ளோம். இந்திய இலங்கையின் நட்புறவில் ஒரு புதிய பரிமாணம் இன்றாகும்.
காணி உரிமையை பெறுவதற்காக நீங்கள் பயணிக்கும் பயணத்தில் இந்தியா துணை நிற்கும். இந்த வீடுகளை நிர்மாணிப்பதில் நீங்கள் நேரடியாக பயணாற்றியுள்ளீர்கள். பயனாளிகளின் வியர்வை, உழைப்பு, சிரமம் ஆகியவை இணைத்து அமைக்கும் இந்திய வீட்டு திட்டத்திற்கு இது ஒரு சிறப்பாகும். இந்த வீடுகள் வெறும் கட்டடங்கள் அல்ல. இது உங்களின் மிகமான கனவுகள். மட்டுமல்ல. எங்களின் கனவும் அது தான்.
இலங்கை நாடானது சமாதானத்துடனும், பாதுகாப்புடனும், வளமுடனும் முன்னேற்றம் அடைவதையே இந்தியா விரும்புகின்றது.
கடந்த வருடம் உங்களின் மத்தியில் உரையாற்றுகையில் சில உறுதி மொழிகளை வழங்கி இருந்தேன். முதலாவதாக அவசர சேவை அம்பியூலன்ஸ்களை இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த உறுதி வழங்கினேன். அதற்கமைவாக கடந்த மாதம் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் இச்சேவையை ஆரம்பித்து வைத்தோம்.
இரண்டாவதாக சிவன் அருளை நீங்கள் பெறுவதற்கு ஏதுவாக கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு 2017 ஆகஸ்ட் மாதத்தில் ஏயார் இந்தியா விமான சேவையை ஆரம்பித்து வைத்தேன்.
மூன்றாவதாக தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகளை அமைக்க வாக்குறுதி அழித்தேன். இதற்கமைய இன்றைய தினம் இந்த 10,000 வீடுகளை அமைக்க இலங்கை ரூபாவில் 12 ஆயிரம் கோடி செலவு செய்து வீடுகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திட நடவடிக்கை எடுத்துள்ளேன்.
இலங்கை ஜனாதிபதி சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியாரின் தலைமையின் கீழ் இந்த 10,000 வீடுகளை அமைப்பதற்கான காணிகள் எற்கனவே இணங்காணப்பட்டள்ளதாக நான் அறிந்துள்ளேன். இந்த மேலதிக 10,000 வீடுகளும் மிக குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்படும் என உறுதி கூறுகின்றேன்.
இந்திய அரசாங்கத்தின் ஊடாக இலங்கையில் நிர்மாணிக்க திட்டமிட்ட 60,000 வீடுகளில் கிட்டதட்ட 47,000 வீடுகள் கட்டியமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இன்று இந்திய வீடு திட்டத்தில் மூலம் மலையக தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட முதல் வீடமைப்பு பகுதிகள் கையளிக்கப்படுகின்றது.
350 மில்லியன் அமெரிக்கா டொலர் நிதி உதவி இலங்கையின் முன்னெடுக்கப்படுகின்ற இந்த வீட்டு திட்டத்திற்கு செலவளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களில் மிக பெரிய திட்டமாக இது கருதப்படுகின்றது.
இலங்கை இந்தியாவிற்கு நெருங்கிய முக்கியமான நாடு எதிர்காலத்திலும் இந்த இரு நாடுகளுக்கு இடையில் இன்றைய நல்லுறவு இப்படியே தொடரும். நண்பர்களே புதிய தனி வீடுகளை பெறுகின்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இல்ஙகையில் தேயிலை துறையில் முதுகெழும்பாக திகழும் நீங்கள் உங்கள் பங்களிப்பின் ஊடான இலங்கை பொருளாதாரத்தை மேலும் வலுவடைய செய்ய வேண்டும் என நான் நம்புகிறேன்.
இந்தியா அரசாங்கமும் இந்தியா மக்களும் உங்களின் முன்னேற்ற பாதையில் என்றும் உறுதுணையாக இருப்போம் என நன்றியும் தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.