மெர்சல் படம் மூலம் தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நடிகர் விஜய்யை இலங்கைக்கு அழைத்துவர முன்னணி நிறுவனமொன்று முயற்சி செய்து வருவதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையை மையமாக வைத்து இயங்கும் புலம்பெயர் தமிழர் ஒருவரின் தென்னிலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழாவிற்கும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் அழைத்து வர குறித்த நிறுவனம் முயற்சி செய்து வருகின்றது.
தமிழகத்தில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனத்தினுடாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும், நடிகர் விஜய் தற்போது அமெரிக்காவில் சர்க்கார் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால், இந்தியா திரும்பிய பின்தான் முடிவு சொல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் குறித்த அழைப்பை ஏற்கும் பட்ஷத்தில் விரைவில் அவரை யாழில் பார்க்கலாம்.?