கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட இருந்த நபர் விமான நிலையத்தில் உயிரிழந்த நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து தெரியவந்துள்ளது.
நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் Calgary சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அவருக்கு அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இறந்தவரின் பெயர் போலான்லி அலோ (49) என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அலோவின் வழக்கறிஞர் கூறுகையில், அலோவின் மனைவியும் இரு பிள்ளைகளும் நைஜீரியாவில் வசிக்கிறார்கள்.
அலோவின் மரண செய்தி அவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனைவியை விரைவில் கனடாவுக்கு அழைத்து வரலாம் என அலோ நினைத்திருந்தார்.
அவருக்கு நிரந்தர புகலிடம் மறுக்கப்பட்டதால் நாடுகடத்தப்பட்டிருக்கலாம்.
எதனால் அலோ இறந்தார் என அவர் குடும்பத்தாருக்கு தெரியவில்லை, அது குறித்த உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இறந்தவருக்கு ஈழத்துவாழ் தமிழர்கள் முகநூல்களில் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்