Loading...
மூவாயிரம் கிலோ கிராம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவ வலையில் சிக்கியுள்ளது.
இதன் பெறுமதி சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
கே. வைரமுத்து என்பவரது இழுவை வலையில் சிக்கிய இந்த மீனை கரைசேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்த மீன் துண்டங்களாக வெட்டப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சமீப நாட்களில் அசாதாரண காலநிலை காரணமாக மீன்கள் குறைவாக சிக்குகின்றபோதிலும் எதிர்பாராதவிதமாக இவ்வாறான இராட்சத மீன் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...