இலங்கையில் முதன்முறையாக விமானம் தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இந்த வருட இறுதிக்குள் இதன் ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்படும் என விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த இவர் கபில ஜயம்பதி புனித புத்த தந்தத்தை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் தியவதன நிலமே நிலங்க தேவவுடன் கலந்துரையாடியபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலில் சிறிய ரக விமானம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். இது முதலில் இரண்டு பயணிகள் செல்லக்கூடிய சிறிய ரக வகையில் அமையும். அதுமட்டுமன்றி, மிக இலகுவாக குறைந்த விலையில் இவ்விமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனைத் தயாரிப்பதற்கான சிறப்பு மத்திய நிலையம் இரத்மலானை பிரதேசத்தில் அமையவுள்ளது என்றார்.