ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், பகூர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அம்ரபரா பேருந்து நிலையத்தில் இருந்து கடத்தப்பட இருந்த ஏழு குழந்தைகளை மீட்டதாகவும், குழந்தை கடத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில் “ மீட்கட்டப்பட்ட குழந்தைகள் அனைவரும் 12லிருந்து 14 வயதுக்குட்பட்டவர்களாகவே உள்ளனர். அவர்களில் ஆறு குழந்தைகள் அம்ரபஹார் பகுதியை சேர்ந்தவர்கள், ஒரு குழந்தை கோபிகந்த் பகுதியை சேர்ந்தது. கடத்தப்படும் இந்த குழந்தைகள் பல்வேறு இடங்களில் அதிக பணத்திற்காக வேலைகளுக்கு அனுப்பப்படுகின்றன “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஜார்கண்டில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்தில் புரோக்கர்கள் மூலம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.