இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல முக்கிய இடம் பிடித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் விராட் கோலி. இளம் வயதிலேயே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஏற்கனவே தோனியின் வாழ்க்கை படமாக எடுத்து வெளியிடப்பட்டு நல்ல வசூலை குவித்தது. தற்போது சச்சின், கபில் தேவ் போன்றோரின் வாழ்க்கை படமாக எடுக்கப்படவுள்ளது.
இதன் அடுத்த கட்டமாக கடந்த 2011ல் இந்தியா உலக கிண்ணத்தை வென்றதன் நினைவாக ஸோயா பேக்டர் என்ற பெயரில் ஹிந்தி படம் எடுக்கப்படுகிறது. விராட் கோஹ்லியின் முழுமையான கிரிக்கெட் சாதனை இதில் இடம் பெறவுள்ளதாம். ஆனால் அவரின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என சொல்லப்பட்டுள்ளது.
இதில் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். இப்படத்தை தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு படங்களை இயக்கிய அபிஷேக் சர்மா இயக்குகிறார்.
அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறாராம்.