கலைஞர் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்காய் அவரது உடலத்தை ராஜாஜி அரங்கத்தில் கொண்டுவந்து வைத்தபோது அவரது உடலம் சரிந்து போவதை அவதானித்திருப்பீர்கள்.
உடலம் இவ்வாறு சரிந்து போகும்போது அரங்கத்தில் நின்ற அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். சிலர் கூக்குரலிட்டு உடலப் பெட்டியைக் காவியோரை ஏசியிருந்தமையும் தெரிந்ததே.
கலைஞரின் உடல் அடக்க நிகழ்வுக்குப் பின்னரும் அந்த காணொளி அனைவராலும் பகிரப்பட்டு தி.மு.கவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீதான விசனத்தைக் கொடுத்தவண்ணமுள்ளது.
இதற்கு என்ன காரணம் என பலராலும் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த உடலப் பெட்டியைச் சுமந்துவந்தவர்களின் அவதானமற்ற தன்மைதான் என குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக படி வழியாக மேலே கொண்டு சென்றபோது முன்னே சென்றவர்களுக்கு ஏற்றாற்போல பின்னே சென்றவர்கள் செல்லவில்லை என கூறப்பட்டுள்ளது. அதாவது முன்னாலும் பின்னாலும் சென்றவர்கள் அந்தப் பெட்டியை சமனிலையில் கொண்டுபோயிருக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த உடலப் பெட்டியைக் கொண்டு சென்றபோது தி.மு.க உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும் அவர்களது அதிகரித்த நெரிசலின் காரணமாகவே அந்த உடலப் பெட்டியில் சம நிலை பேணப்படாமல் போனதாகவும் பிறிதொரு தரப்பு கூறிள்யுள்ளது.