முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் மத்தியில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்காக சண்டை உருவாகியுள்ளதைப் பற்றி நாட்டு மக்கள் கவனம் செலுத்தத்தேவையில்லை.
எது எவ்வாறிருப்பினும் 2020 ஆம் ஆண்டில், இதே கூட்டுக்கட்சிகள் கொண்ட நல்லாட்சி அரசாங்கமே அமையுமென, திடமாகக் கூறுவதாக வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் மாதிரிக் கிராமம், இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“இந்த நாட்டை சூரையாடிய, முன்னாள் ஆட்சியாளர்கள் மீண்டும் வர முயற்சிக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என முட்டி மோதிக் கொள்கிறார்கள்.
இந்த நாட்டிலுள்ள மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்கா ஒரு போதும் இவர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு விருபவில்லை.
மாறாக வெளிநாட்டு நாணயங்களை எண்ணிய கைகளில் மீண்டும் டொலர், பவுண் யூரோ போன்ற வெளிநாட்டு நாணயங்களை மீண்டும் அவர்களின் கைகளில் எண்ணுவதற்காக, அதி வேக நெடுஞ்சாலையில் சென்று ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்.
கடந்த காலத்தில், மத ஸ்தலங்களை இடித்து அதில் மகிழ்சி கண்டு இந்த நாட்டை சூரையாடியவர்கள், தற்போது பன்சாலைகள். கோவில்கள், பள்ளிவாசல்கள் தேவாலங்களுக்குச் யாத்திரை செல்கிறார்கள் எது எவ்வாறிருப்பினும் 2020 ஆம் ஆண்டில் இதே கூட்டுக்கட்சிகள் கொண்ட நல்லாட்சி அரசாங்கமே அமையும்.” என்றார்