மோட்டார் வாகனங்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அபராத முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை (15) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பேரூந்து ஓட்டுநர் சங்கத்தின் அமைப்பாளர் யூ.கே.குமார ரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பவுஸர் மற்றும் கொள்கலங்களின் ஓட்டுநர்களினதும் கொழும்பு நகரில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டி ஓட்டுநர்களினதும் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தனியார் பேரூந்து வண்டி உரிமையாளர்களின் சங்கம் பங்குபற்றாது என்றும் தெரிவித்துள்ளது.
புதிய முறையில் அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளதால் வாகன் ஓட்டுநர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்’ எனும் தொனிப்பொருளில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.