பிரித்தானிய நாடாளுமன்றம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது, வேகமாக வந்த கார் ஒன்று மோதியதால் பொலிசார் குவிக்கப்பட பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தின் Westminster பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்றம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று, அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி நின்றது.
இதனையடுத்து ஏராளமான பொலிஸார் துப்பாக்கிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பில் இருந்து வரும் நிலையில், கார் ஒட்டி வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் பற்றிய எந்தவித தகவலும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிக்கு விரைந்துள்ள சீருடை அணியாத பொலிஸார் பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு, பாராளுமன்ற பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலருக்கு லேசான காயமடைந்துள்ளதாகவும், சைக்கிள் ஓட்டிவந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.