லண்டன் இந்து ஆலயம் ஒன்றில் இன்று நடைபெற்ற திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அப்போது, இலங்கை தமிழர்கள் ஆலயம் முன்பு சாப்பிட்ட எச்சில் தட்டுகளை ஒரே இடத்தில் போட்டு ஒரு குப்பை மேடு போன்று முகம் சுழிக்கும் வண்ணம், போட்டுவிட்டு சென்ற போது, அதைக் கண்டு ஆத்திரமடைந்த இலங்கை தமிழர் ஒருவர் வீடியோ வெளியிட்டு சரமாரியாக கேள்விகளை தொடுத்துள்ளார்.
இந்த விடியோ தற்போது இணையதளத்தில் பரபரப்பை எற்படுத்தி வருகிறது.
குறித்த வீடியோவில் இலங்கை தமிழர் பேசும் போது ஒர் உண்னதமான நாட்டில் இப்படி குப்பைகளை குப்பை தொட்டில் போடமால் இந்த மாதிரி ஆலயம் இருக்கும் இடத்தில் போடு செயல் மதிக்கதக்க செயல் என கருதுகிறோம் மற்றும் இப்படி குப்பைகளை கண்ட இடத்தில் போட்டால் எப்படி இந்த நாடு வளர்ச்சியடையும் என அந்த வீடியோவில் அவர் பதிவிட்டுயிருந்தார்.
இந்து ஆலயத்தில் நடந்த இந்த செயலை மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் எனவும் இனி இந்த மாதிரி நிகழ்வு நடைபெற கூடாது என அவர் வீடியோவில் வலியுறுத்தி இருந்தார்.