பிக் பாஸ் வீட்டில் யாஷிகா மற்றும் மஹத் இருவருக்கும் நடுவில் நட்பை தாண்டி எதோ ஒரு உறவு இருக்கிறது என்று பார்வைளர்கள் சந்தேகித்து வந்தனர்.
அதனை ஊர்ஜிதபடுத்தும் விதத்தில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தான் மஹத்தை காதலிப்பது உண்மை தான். ஆனால், அவருக்கு காதலி இருக்கிறார் என்று தெரியும் அதனால் நான் அதனை வெளிப்படுத்தவில்லை என்று அனைவர் முன்பும் போட்டுடைத்தார் யாஷிகா. ஆனால், மஹத்தோ, யாஷிகா எனக்கு நல்ல தோழி மட்டும் தான் என்று மழுப்பிவிட்டார்.
ஆனால், உண்மையில் யாஷிகா, மஹத்திடம் ஒரு முறை கூட ஐ லவ் யூ என்று சொன்னது இல்லை. ஆனால், மஹத், யாஷிவிடம் பல முறை ஐ லவ் யூ என்று சொல்லி இருக்கிறார் என்று சமீபத்தில் மும்தாஜும் கூறியிருந்தார்.
இப்படி இவர்களது இருவர் காதலையும் பற்றி பல பேர் மாறி, மாறி கருத்து கூறிவந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் பொன்னம்பலம் பேட்டி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
மேலும், யாஷிகா மற்றும் மஹத்திற்கும் இடையையேயான காதல் குறித்து கேட்கபட்டது,
அதற்கு பொன்னமலபலம், ‘அவர் யாஷிகாவை எந்த அளவிற்கு லவ் பண்ராறுனு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது. அந்த விசயத்துல நான் கலந்துகொள்ளல, ஊரு நாலு விதமா பேசும், அது என்ன பேசறதுக்கு எவ்ளோ நேரம் ஆகபோகுது. அதனால, அவங்க லவ் பண்னா பன்னிட்டு போகட்டும், எனக்கு அதுல ஒன்னும் கிடையாது என்று பட்டென்று பதிலளித்தார்.
ஏற்கனவே யாஷிகா மற்றும் மஹத்தின் உறவு குறித்து பேசிய சிம்பு மற்றும் மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா இருவருமே, மஹத் செய்வது தவறு இல்லை, அவர்கள் இருவரும் நட்பாக தான் பழகுகின்றனர் என்று பல கருத்துக்களை கூறினர்.
ஆனால், அதே கேள்வியை பிக் பாஸ் போட்டியாளராக பொன்னம்பலத்திடம் கேட்கப்பட்ட போது அவங்க லவ் பண்ணா பண்ணிட்டு போகட்டும் எனக்கு ஒன்னும் இல்ல என்ற ஒரே வார்த்தையில் அவரது ஸ்டைலில் நெத்தியடியாக பதிலளித்துவிட்டார்.