பொதுவாகவே தற்போது சில ஆண்கள் மது, புகைப்பிடித்தல் என ஏதாவது ஒரு பழக்கத்தினை கட்டாயமாக கொண்டிருக்கின்றனர். இது அவர்களுக்கும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு கெடுதல் என்று அறிந்தும் அதற்கு அடிமையாகிவருகின்றனர்.
ஒரு சிலர் தொடர்ந்து சிகரெட் பிடித்து வருவார்கள்.. இதன் காரணமாக அவர்களின் உதட்டில் கருப்பு நிறமாக மாறி இருக்கும். முகம் முழுக்க கலையாக நல்ல ஸ்கின் டோன் இருந்தாலும், உதடு மட்டும் கருமையாக இருக்கும்… பார்ப்பதற்கு சற்று அசிங்கமாக இருக்கும் என்றே சொல்லலாம்.
பீட்ரூட் சாருடன் சிறிது எலுமிச்சை சேர்த்து, அதனை உதட்டில் தடவி சுமார் 15 நிமிடம் கழித்து கழுவி விட, உதடு மிகவும் அழகாக அருமையான பிங்க் நிறத்தில் இருக்கும்.
சர்க்கரை மற்றும் லெமன்
இதே போன்று சர்க்கரை உடன் சிறிது லெமன் சேர்த்து, அதனை உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து நார்மல் தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர, உதடு மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
கிளிசரின் மற்றும் லெமன் பேக்
கிளிசரின் உடன் லெமன் பேக் சேர்த்து நன்றாக கலந்து பின் உதட்டில் தடவி வர, உதட்டில் உள்ள கருமை நிறம் நீங்கி விடும்.
மாதுளைப்பழம்
மாதுளை பழ ஜூசை உதட்டில் தடவி வர, உதடு மிகவும் அழகாக எந்த வறட்சியும் இல்லாமல் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.