காதல் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருப்பினும் கூட அதில் அனைவரும் ஒரே மாதிரி தான் ஈடுபடுகிறோமா எனில், இல்லை என்பது தான் பெரும்பாலான பதிலாக இருக்கும்.
ஆம், நாம் அனைவரும் ஒரே மாதிரியான சுபாவம் கொண்டவர்கள் அல்ல. ஒவ்வொரு ராசி காரர்களும் இப்படி தான்இருப்பார்கள் என்ற பொதுவான குணாதிசயங்கள் சில இருக்கும்.
அதில், காதலில் கன்னி ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள், அவர்களது குணாதிசயங்கள் எப்படி இருக்கும். கன்னி ராசி பெண்களை காதலிப்பதால் நன்மைகள் என்ன, அவர்கள் எந்த சூழலில் எப்படி நடந்துக் கொள்வார்கள் என இனி பார்க்கலாம்…
தூய்மை
இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பார்கள். அது வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி. இவர்கள் சுத்தம் சோறு போடும் என்பது போல வாழுபவர்கள்.
உடை உடுத்தும் முறை
எந்த உடை உடுத்தினாலும் அதை கச்சிதமாக, அழகாக உடுத்தும் முறையை இவர்கள் கையாள்வார்கள். வீட்டின் சுத்தத்தை போலவே, உடை உடுத்துவதிலும் மிகவும் கவனமாக இருப்பவர்கள்.
தீராது விளையாட்டில் ஆர்வம்
கன்னி ராசி பெண்கள் ஆண்களுக்கு நிகராக இல்வாழ்க்கை தாம்பத்தியத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
நினைவு சக்தி
சாதாரணமாகவே பெண்கள் அனைத்தையும் நினைவில் வைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். இதில் கன்னி ராசி பெண்கள் அதுக்கும் மேல லெவல் ரகம்.
நட்புறவு
இவர்களுக்கு நட்புறவின் மீது ஈடுபாடு அதிகம். இதனால் இவர்களது தோழிகள் பற்றியோ, நட்புறவு பற்றியோ கேலி கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது.
சந்தோஷம் கேரண்டி
உங்களோடு பழகிய ஆரம்ப நாட்களில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும். போக, போக உங்களை மகிழ்ச்சிக்கு இவர்கள் தான் முக்கிய காரணமாக இருப்பார்கள்.
நகைச்சுவையான பெண்
நீங்கள் சந்தித்த பெண்களிலேயே மிகவும் நகைச்சுவையான பெண்ணாக கன்னி ராசி பெண்கள் இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
அழகும், அறிவும்
பொதுவாகவே, அழகான பெண்கள் அறிவாக இருக்க மாட்டார்கள். அறிவான பெண்கள் அழகாக இருக்கமாட்டார்கள் என்ற கருது நிலவுகிறது. ஆனால், இதற்கு ஓர் முரணாக கன்னி ராசி பெண்கள் இருப்பார்கள்.
கனவு காண்பவர் அல்ல
அனைத்தையும் செயல்முறையில் பொருத்திப் பார்க்க கூடிய பண்புடையவராக கன்னி ராசி பெண் இருப்பார்கள். வீண் கனவு கண்டு நாட்கள் கழிக்க இவர்கள் பெரும்பாலும் முயல மாட்டார்கள்.
ரொமான்ஸ்
செயல்முறை படுத்தி பார்ப்பதால் இவர்கள் ரொமான்ஸில் ஈடுபட மாட்டார்கள் என நினைக்க வேண்டாம். இவர்கள் 50-50 போன்று நாம் முன்பு கூறியப்படியே அறிவு, அழகுடன் சேர்த்து புரிதலோடு காதல் கொள்ளும் குணம் உடையவர்கள்.