ஸ்ரீ லங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத் துறை அமைச்சினால் ஹங்கேரியாவில் இருந்து குளிரூட்டப்பட்ட 1௦௦௦ பேருந்துக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இந்த பேருந்துக்களை வழங்கும் ஹங்கேரிய நாட்டு நிறுவனத்துடன இலங்கை போக்குவரத்து சபை இணைந்து அமைக்கவுள்ள கூட்டு நிறுவனத்தின் மூலம் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்க கூடிய 200 பேருந்துக்களும் 750 ஹைபிரிட் பேருந்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மின்சாரத்தில் இயங்க கூடிய 250 பேருந்துக்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள நகரப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன், ஏனைய பேருந்துக்கள் கொழும்பு மற்றும் தூரப் பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் ஸ்ரீவர்தன தெரிவித்தார்.
புதிதாக கொண்டுவரப்படும் பேருந்துக்கள் ஹங்கேரிய நிறுவனத்தினால் பராமரிக்கப்படுவதுடன் இந்த சேவையின் மூலம் பெறப்படும் வருமானத்தில் ஒரு பகுதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு கிடைக்கும் வகையில் உடன்படிக்கை செய்துகொள்ளப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.