Loading...
தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியின் பெல்ஹர பகுதியில் இன்று (15) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உள்ளனர்.
லொறி இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மூவரும் தபுள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Loading...
ஹபரணயில் இருந்து தம்புள்ளை நோக்கி நெல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்றும் தம்புள்ளையில் இருந்து ஹபரண நோக்கி நூடில்ஸ் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளன.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்களின் நிலமைகள் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...