பிக்பாஸ் வீட்டில் வர வர மோசமான சண்டைகள் வருகிறது. நேற்று மஹத் மற்றும் டேனியல் இடையே அடிதடி வரை வந்தது.
இன்றும் அதே டாஸ்க் விளையாடுகிறார்கள் போட்டியாளர்கள், இந்த முறை மஹத் மற்றும் ஐஸ்வர்யா இடையே சண்டை வருகிறது. ஐஸ்வர்யாவோ மஹத்தை ஒழுங்காக கை வெக்கவும் என்று கூற மஹத்தும் காரணம் சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா மஹத் இப்படி கை வெக்கிறார் என்று கோபமாக கூறுகிறார்.
பிறகு சென்ராயன் இரு அணியும் விளையாட்டை ஒழுங்காக விளையாடுவோம் என்று கூற ரித்விகா நீங்கள் என்ன நியாயமாக விளையாடுகிறீர்களா என கேட்கிறார்.
இன்று படு பயங்கரமான பிரச்சனைகளை நிகழ்ச்சியில் பார்க்கப்போகிறோம் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
நியாயமா விளையாடுறீங்களா நீங்க?! ?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/3LkLoTfK4z
— Vijay Television (@vijaytelevision) August 15, 2018