எந்த ஒரு சினிமா நிகழ்ச்சி எடுத்துக் கொண்டாலும் நடிகைகளின் உடை ஹைலைட்டாக தெரியும். அதற்காகவே நடிகைகளும் நிறைய விஷயங்கள் செய்வார்கள்.
அண்மையில் கூட நடிகை ரிதிகா சிங் தான் தெலுங்கில் நடித்திருக்கும் நீவிவரோ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சூப்பராக உடை அணிந்து வந்துள்ளார். ஆனால் காலில் செருப்பு இல்லாமல் மேடை ஏரியுள்ளார்.
ஏனெனில் அவருக்கு சரியான நேரத்தை கடைப்பிடிப்பது முக்கியமான விஷயமாம். தன்னுடைய உடைக்கு சரியான செருப்பை தேடியிருக்கிறார், கிடைக்காததால் நேரத்தை வீணாக்காமல் வேறொரு ஷு ஒன்றை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
நிகழ்ச்சி நடக்கும் அரங்கிற்கு வந்ததும் வாசலுக்கு வெளியிலேயே தான் அணிந்து வந்த ஷூவை கழற்றிவிட்டு மேடைக்கு சென்றார். இதைப் பார்த்த அரங்கில் இருந்தவர்கள் ஆச்சர்யமாக அவரை பார்த்துள்ளனர்.