சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய படமும் இல்லாததால் சின்ன ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தேவராட்டம் படத்தில் நடிக்கவுள்ளார்.
என்டிஆரின் வாழ்க்கை வரலாற்று படத்திற்காக தற்போது தெலுங்கு இயக்குனர் க்ரிஷ் மஞ்சிமாவை அணுகியுள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி ரோலில் நடிக்க தற்போது மஞ்சிமா மோகனுக்கு வாய்க்கு வந்துள்ளது. புவனேஸ்வரி என்டிஆரின் மகள் என்பது அனைவருக்கும் தெரியும்.
மஞ்சிமா இந்த படத்தை நடிக்க ஒப்புக்கொண்டால் அவர் சந்திரபாபு நாயுடுவாக நடிக்கும் ராணாவுக்கு ஜோடியாக நடிப்பார்.
நடிகர் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரின் மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.