சினிமாவில் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் வரிசையாக சினிமாவிக்குள் நுழைந்து வருகின்றனர். இப்படி நுழைந்தவர்களில் சிலர் வெற்றி வலம் வருகின்றனர். இன்னும் சிலர் போராகிறார்கள். இந்த வகையில் நடிகர் ஜெயராம், நடிகை பார்வதியை காதலித்து மணந்தார். இவர்களது மகன் காளிதாஸ் ஏற்கனவே ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தில் அறிமுகமாகிவிட்டார்.
ஜெயராம், பார்வதி மகள் மாளவிகாவுக்கும் நடிக்க வாய்ப்பு வந்த போதும் பெற்றோர் மறுத்துவிட்டனராம். இதையடுத்து பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் சேர்ந்த மாளவிகா. சமீபத்தில் படிப்பை முடித்து பட்டமும் பெற்று விட்டார்.Jayaram daughter cinema entry
பட்டப்படிப்பு முடித்த மாளவிகா திரையுலகிற்குள் நுழைவாரா என்று ஜெயராமிடம் கேட்டபோது,’மாளவிகாவை பொறுத்தவரை சினிமா ஒருபொருட்டல்ல, நடிப்பிலும் ஆர்வம் கிடையாது. பட்டப்படிப்பை முடித்தவர், அடுத்து விளையாட்டு துறை சம்பந்தமான படிப்பிற்காக விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறார்’ என்றார்.