தமிழில் “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் மூலம் பிரபலமான ரகுல் ப்ரீத் சிங், வீட்டு ஞாபகத்தால் வந்த ஏக்கம் காரணமாக நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் ”தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படம் மூலம் பிரபலமானார்.
தெலுங்கில் அதிக கவனம் செலுத்திவரும் ரகுல், தமிழ் மற்றும் ஹிந்தியிலும் பேசப்படும் பிரபலமாக உருவாகியுள்ளார்.
அந்த வகையில் தற்போது, தமிழில் ”என்ஜிகே”, ”கார்த்தி 17”, ”எஸ்கே 14” மற்றும் தெலுங்கில் ”என்டிஆர்” உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு வீட்டு ஞாபகம் வந்ததினால் அந்த ஏக்கம் காரணமாக நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட முடிவு எடுத்துள்ளாராம்.