தற்போது, கிகி சேலஞ் என்ற ஒன்று டிரன்டில் இருந்து வருகிறது. இதற்கு நடிகர்களும் விதிவிலக்கல்ல. பல்வேறு நடிகர், நடிகைகள் கிகி சவால் ஏற்று காரிலிருந்து இறங்கி நடனம் ஆடி மீண்டும் காருக்குள் அமர்வதுபோன்ற காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். கனடா நாட்டு பாடகர் பாடல் பாடி விடுத்த சவாலை ஏற்றே இது பகிரப்படுகிறது.
இதனை நடிகை காஜல் அகர்வாலும் சற்று வித்தியாசமாக இந்த சவாலை ஏற்றார். அவர் நடனம் ஆடி வெளியிட்ட வீடியோவில் கிகி நடனம் ஆடுபவர்களை எச்சரிக்கை செய்வதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாய் கிகி நடனம் ஆடுபவர்கள் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடிவந்தார்கள். இவர் சற்று மாறுதலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தினார்.
சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்த காஜல், கனடா பாடகரின் பாடல் போட்டதும் சாலையில் இறங்கி ஆடி விட்டு மீண்டும் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொள்கிறார். அதில் ஒரு விழிப்புணர்வு செய்தியையும் கூறியிருக்கிறார். காஜலுடன் தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸும் ஆடியிருக்கிறார்.