பட வாய்ப்புக்காக தன்னை பலர் படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்துள்ள நிலையில், விஜய் அழகானவர், சூர்யா மற்றும் அவரின் குடும்பத்தார் அனைவரும் நல்லவர்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த சில பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் அனைவரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக தெரிவித்தார் ஸ்ரீ ரெட்டி.
தமிழ் திரையுலக பிரபலங்கள் குறித்து ஆதாரங்கள் வைத்திருப்பதாக கூறிய அவர் அவற்றை வெளியிடவில்லை.
ஃபேஸ்புக் லைவில் வந்த ஸ்ரீ ரெட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இனி தெலுங்கு படங்களில் நடிக்கப் போவது இல்லை என்ற ஸ்ரீ ரெட்டி தமிழ் திரையுலகில் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.
மேலும், அஜித் தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், விஜய் அழகானவர் என்றும், சூர்யா, அவரின் குடும்பத்தார் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. கோலிவுட்டில் செட்டிலாக முயற்சிக்கும் நிலையில் அவர் பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்.
ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக பேசிய நடிகர் டி. ராஜேந்தரை தலை வணங்குவதாக தெரிவித்த ஸ்ரீ ரெட்டி சிம்பு நல்லவர் என்று கூறியுள்ளார். தற்போது சூர்யா, விஜய், அஜித்துக்கு ஐஸ் வைத்துள்ளார்.
சென்னைக்கு வந்தபோதே பேட்டிகளின்போது அஜித் தான் ரொம்ப பிடிக்கும், அவர் ரொம்ப அழகு என்று கூறி அவரின் புகைப்படத்தை முத்தமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கோலிவுட்டில் செட்டிலாக விரும்புகிறார்.
ஸ்ரீ ரெட்டி பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டதோடு சில நடிகைகளின் பெயர்களையும் வெளியிட்டார். அந்த நடிகைகள் எல்லாம் நடிப்பதை விட வெளிநாடுகளுக்கு சென்று விபச்சாரம் செய்து அதிகம் சம்பாதிப்பதாக கூறினார்.
எனினும், ஸ்ரீ ரெட்டி விவகாரம் குறித்து எந்த நடிகையும் வாய் திறக்கவில்லை. அவர் பெயரை எடுத்தாலே பேச்சை மாற்றுகிறார்கள்.