தெலுங்கானா மாநிலத்தில் 29 வயது பெண் வக்கீலை பலாத்காரம் செய்ததாக நீதிபதி கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, சூரியபேட்டையில், நீதிபதி சத்திய நாராயணராவ் (28) என்பவர் மீது 29 வயதான பெண் வக்கீல் ஒருவர் முறைப்பாடு செய்தார். அதில், தன்னை நீதிபதி சத்தியநாராயண ராவ் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் வக்கீல் அளித்த புகாரில் சத்திய நாராயணராவ் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் காட்டி, தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டு, தற்போது மற்றொரு பெண்ணோடு திருமணத்திற்கு நிச்சயம் செய்துவிட்டார் என கூறியிருந்தார்.
அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் நீதிபதி மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நீதிபதி சத்திய நாராயணராவ் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.