Loading...
திருமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடமிருந்து சொத்துகள் மற்றும் பணத்தை மோசடிச்செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், சிவில் பொறியியலாளர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவரை மிரிஹான சிறப்பு குற்ற நடவடிக்கைகள் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது இவர் சிவில் பொறியியலாளர் இல்லை என்றும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசிகள் மற்றும் நான்கு சிம் அட்டைகளிலிருந்த அலைபேசி இலக்கங்களின் ஊடாக விசாரணைகளை நடத்திய போது, அவர், இதுவரைக்கும் 100 பெண்களை ஏமாற்றியுள்ளாரென, தெரியவந்துள்ளது.
Loading...
அவ்வாறு மோசடியில் ஈடுபட்டு, ஏமாற்றி பெற்றுக்கொண்ட மகிழுர்ந்து(கார்), மடிகணினி, கணினி மற்றும் 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
Loading...