அனைவருக்கும் பிடித்த மீன் குழம்பை எளிதில் வைக்க டிப்ஸ்
ஆயத்த நேரம் : 20
நிமிடங்கள் சமைக்கும் நேரம் : 15
நிமிடங்கள் பரிமாறும் அளவு : 4 நபர்கள்
தேவையான பொருட்கள்:
மீன் – அரை கிலோ
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்தூள் – 6 ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 3
பூண்டு – 2
முழு பூண்டு
தேங்காய் – 2
துண்டுகள் கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
* சின்ன வெங்காயம் 10 எடுத்து துருவிய தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
* புளியை கரைத்து வைக்கவும்.
* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
* பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
* புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.