தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் உள்ள முக்கியமான அணைகளுள் உள்ள நீர்மட்டத்தை அறிந்துகொள்வோம்.
தமிழகத்தின் முக்கியமான அணைகளுள் ஒன்றான மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. இன்றைய நிலவரப்படி அணை நிரம்பி இருக்கிறது. அதவாது அணையின் கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது.
அடுத்ததாக பவானிசாகர் அணை, 105 அடி நீர் மட்டம் கொண்டது. இந்த அணையில் இன்றைய நிலவரப்படி 101 புள்ளி 98 அடி நீர் நிரம்பி இருக்கிறது
90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 57 புள்ளி 80 ஆக இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவு 152 அடி. தற்போது 142 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது.
வைகை அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடி. இன்று 62 புள்ளி 27 அடியாக இருக்கிறது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 143 அடி. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 137 புள்ளி 80ஆக உள்ளது.
சாத்தநூர் அணை நீர்மட்ட அளவு 119 அடி இங்கு தற்போது 91 புள்ளி 70 அடி அளழுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. அணையின் இன்றைய நீர்மட்டம் 118 அடியாக உள்ளது.
உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் 124 புள்ளி 80 அடியை எட்டியுள்ளது.
65 அடி நீர்மட்டம் கொண்ட கபினி அணையும் 129 அடி நீர்மட்டம் கொண்ட ஹராங்கி அணையும், 117 அடி நீர்மட்டம் கொண்ட ஹேமாவதி அணையும் மழையால் நிரம்பியுள்ளன.